ஐசிசி தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது: பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சாதனை
- ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51-வது சதம் ஆகும்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் துபாயில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இந்தியா விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறியது. விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.
இந்நிலையில், ஐ.சி.சி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அதன்படி, 2012 டி20 உலகக்கோப்பை, 2015 உலகக் கோப்பை ஒருநாள் போட்டி, 2016 டி20 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடரில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.