விளையாட்டு

சென்னை பல்கலைக்கழக தடகளம்: குண்டு எறிதலில் லயோலா வீரர் சூர்ய பிரகாஷ் சாதனை

Published On 2023-12-22 05:52 GMT   |   Update On 2023-12-22 05:52 GMT
  • ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் லயோலா கல்லூரி வீரர் சூர்ய பிரகாஷ் தங்கப்பதக்கம் வென்றார்.
  • பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம். ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை டி.லதா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

சென்னை:

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 55-வது டாக்டர் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் லயோலா கல்லூரி வீரர் சூர்ய பிரகாஷ் (16.51 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பிரதீப் குமாரும் (டி.ஜி.வைஷ்ணவா), 100 மீட்டர் ஓட்டத்தில் சந்தோஷ்சும் (டி.பி.ஜெயின்), 400 மீட்டர் ஓட்டத்தில் நாகார்ஜூனனும் (லயோலா) முதலிடம் பிடித்தனர்.

பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம். ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை டி.லதா (37 நிமிடம் 42.27 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். வட்டு எறிதலில் பிரிய தர்ஷினி, ஈட்டி எறிதலில் சவுமியாவதி (இருவரும் எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா), 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஸ்ரீ ரேஷ்மா (லயோலா), 400 மீட்டர் ஓட்டத்தில் ருசிகா (எத்திராஜ்), 100 மீட்டர் தடை ஓட்டத்தில் மரிய நிவேதா, டிரிபிள ஜம்ப்பில் பபிஷா, குண்டு எறிதலில் ஷர்மிளா (மூவரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா) ஆகியோர் முதலிடத்தை சொந்தமாக்கினர்.

Tags:    

Similar News