விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: போதைப்பொருள் வைத்திருந்ததாக ஆஸ்திரேலியா ஹாக்கி வீரர் கைது

Published On 2024-08-07 16:02 GMT   |   Update On 2024-08-07 16:02 GMT
  • ஒரு கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்.
  • ஆஸ்திரேலியா ஒலிம்பிக் கமிட்டி கைது செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது.

போதைப்பொருள் விற்பனையாளரிடம் இருந்து கோகைன் போதைப்பொருள் வாங்கியதாக ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் டாம் கிரேக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு) கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அவரை கைது செய்தபோது ஒரு கிராம் போதைப்பொருள் கையில வைத்திருந்தார். புதன்கிழமை காலை வரை அவரை காவலில் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாத்திரை வடிவிலான போதைப்பொருள், கோகைன் போதைப்பொருள் வைத்திருந்த விற்பனையாளர் (வயது 17) கைது செய்யப்பட்டுள்ளார்.

விற்பனையாளரிடம் அதிகப்படியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீசார் இந்த வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட டாம் கிரேக், புதன்கிழமை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் என்பது ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கமிட்டி பதில் கூற மறுத்துள்ளது.

Tags:    

Similar News