கிரிக்கெட் (Cricket)

வயதான ஆஸி. பவுலர்கள்: இந்த முறை ஆஷஸ் தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்பு- ஸ்டூவர்ட் பிராட்

Published On 2025-03-14 20:57 IST   |   Update On 2025-03-14 20:57:00 IST
  • கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயனுக்க வயது ஆகிவிட்டது.
  • ஸ்மித், டிராவிஸ் ஹெட் பேட்டிங்கை மட்டுமே அதிக அளவில் நம்பியுள்ளது ஆஸ்திரேலியா

கிரிக்கெட்டில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஆஷஸ் தொடர் மிகக்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு ரசிகர்களிடம் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைவிட அதிக அளவிற்கு இந்த தொடருக்கு உண்டு.

இந்த வருடம் இறுதியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வென்றதில்லை.

இந்த நிலையில் வயதான பந்து வீச்சாளர்கள், அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்ட ஆஸ்திரேலியா அணியை இந்த முறை இங்கிலாந்து வீழ்த்தி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் "உண்மையிலேயே, எங்களுக்கு வாய்ப்பு என்பதுடன்தான் ஆஸ்திரேலியாவுக்கு செல்வோம். ஆஸ்திரேலியா உலகின் சிறந்த அணி. சொந்த மண்ணில் நம்பமுடியாதவை. ஆனால் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் என வயதான பந்து வீச்சு குழுவை கொண்டுள்ளது. தொடக்க வீரராக விளையாட வாய்ப்புள்ள சாம் கோன்ஸ்டாஸ் உள்ளிட்ட அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.

அவர்கள் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை மட்டுமே அதிக அளவில் நம்பியிருக்க வேண்டும். மார்னஸ் லபுசேன் ரன் சேர்க்க திணறுகிறார். ஆகவே, இங்கிலாந்து அணியின் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்தால், வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவின் தொடரை வெல்வதற்கன அணி. இருந்தாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News