கிரிக்கெட் (Cricket)

இந்தியா- பாகிஸ்தான் விளையாடிய ஆடுகளத்தில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

Published On 2025-03-08 11:48 IST   |   Update On 2025-03-08 11:48:00 IST
  • இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
  • இந்த பிட்சில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் (பிட்ச்) விவரம் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 23-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

இந்த பிட்சில் இந்திய அணி பாகிஸ்தாைன 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் கள நடுவர்களாக பால் ரீபெல் (ஆஸ்திரேலியா), ரிச்சர்டு இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) செயல்படுவார்கள்.

ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்) 3-வது நடுவராகவும், தர்மசேனா (இலங்கை) 4-வது நடுவராகவும் இருப்பார்கள். மேட்ச் நடுவராக ரஞ்சன் மதுகல்லே செயல்படுவார்.

Tags:    

Similar News