'கே.எல். ராகுல் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினாரா?' - வைரலாகும் வீடியோ
- சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை கே.எல்.ராகுல் தொட்டு பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கே.எல்.ராகுல் 2 ஆவது இன்னிங்சில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் ஆட்டம் நடந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 107 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை கே.எல்.ராகுல் தொட்டு பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தை தொட்டு பார்ப்பார். அதனையும் கே.எல்.ராகுலின் இந்த வீடியோவையும் நெட்டிசன்கள் தொடர்புப்படுத்தி தனது கடைசி டெஸ்டில் கே.எல். ராகுல் விளையாடியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கே.எல்.ராகுல் 2 ஆவது இன்னிங்சில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
இப்போட்டியில் காயம் காரணமாக விளையாடாத சுப்மன் கீல் அடுத்த போட்டியில் இந்திய அணியில் இணையவுள்ள நிலையில் கே.எல்.ராகுலின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 2 ஆவது இன்னிங்சில் சதமடித்ததால் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.