எத்தனை கேப்டன்கள் இதுபோல் உள்ளனர்- ரோகித் குறித்து மனம் திறந்த யுவராஜ்
- ரோகித் இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
- அவர் கேப்டனாக இருந்த போதுதான் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவை நியூசிலாந்து ஒயிட்வாஷ் செய்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனால் இந்திய அணி குறித்தும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதி டெஸ்ட்டில் மற்றொரு வீரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியை விட்டு கொடுத்தார். எத்தனை கேப்டன்கள் இதுபோல் செய்துள்ளனர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அவர் கேப்டனாக இருந்த போதுதான் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இவரின் கேப்டன்சியில்தான் மும்பை அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றது.
பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதி டெஸ்ட்டில் மற்றொரு வீரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியை விட்டு கொடுத்தார். எத்தனை கேப்டன்கள் இதுபோல் செய்துள்ளனர்? ஒரு தொடர் அவர் யார் என்பதை முடிவு செய்து விடாது.
என யுவராஜ் கூறினார்.