கிரிக்கெட் (Cricket)
null

மைதான வேலைகள் மந்தம்- சாம்பியன்ஸ் டிராபி நியூசிலாந்துக்கு மாற்றம்?

Published On 2025-01-16 20:04 IST   |   Update On 2025-01-16 21:40:00 IST
  • லாகூர் மற்றும் கராச்சியில் இன்னும் பெரிய அளவில் கட்டுமான பணிகள் எஞ்சியுள்ளதாக செய்திகள் பரவின.
  • இந்த செய்திக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி பாகிஸ்தானின் கராச்சியில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்தியாவுக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் லாகூர் மற்றும் கராச்சி மைதானங்களில் இன்னும் பெரிய அளவில் கட்டுமான பணிகள் எஞ்சியுள்ளதாக பல செய்திகள் பரவின. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களும் வைரலானது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் மைதான வேலைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிவடையாது என்றும் எனவே இந்த போட்டி பாகிஸ்தானில் இருந்து முழுமையாக நியூசிலாந்துக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News