கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 1 ரன்னில் இந்தியா வீழ்த்தும்- கிளார்க் கணிப்பு

Published On 2025-03-01 17:20 IST   |   Update On 2025-03-01 17:20:00 IST
  • இறுதிபோட்டியில் எந்த 2 அணிகள் மோதும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
  • நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

துபாய்:

சாம்பியன்ஸ் டிராபி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி கிட்டதட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் எந்த இரண்டு அணிகள் இறுதிபோட்டியில் மோதும் என்ற கேள்விக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் எனவும் இதில் 1 ரன்னில் இந்தியா வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும். நான் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இந்தியா தான் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி வெல்லும்.

இந்தியா தான் இப்போது உலகின் சிறந்த ஒருநாள் அணியாக உள்ளது. நம்பர் ஒன் ஒருநாள் அணியாகவும் உள்ளது. எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் மோதும். அதில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

மேலும் ரோகித் சர்மா நல்ல பார்மில் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரோஹித் சர்மா இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News