ஐ.பி.எல்.

ரசிகர்களுக்கு விருந்து: ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் பிரமாண்ட நிகழ்ச்சி

Published On 2025-03-19 21:53 IST   |   Update On 2025-03-19 21:53:00 IST
  • ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது.
  • கலை நிகழ்ச்சியில் திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடக்கவுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்வார்கள்

17-வது சீசனின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது, இதில் டைகர் ஷெராஃப், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் ஸ்டேடியத்தில் கலக்கினர்.

அந்த வகையில் இந்த சீசனில் பாலிவுட் பிரபலங்கள் கலக்க இருக்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங், திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, வருகிற 22-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் தொடக்க விழா கொண்டாட்டத்தில் இந்தி நடிகை திஷா படானி மற்றும் பாடகி ஷ்ரேயா கோஷால் பங்கேற்க உள்ளனர். மற்ற இடங்களில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News