ஐ.பி.எல்.

ஐபிஎல் 2025: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஓர் பார்வை

Published On 2025-03-21 16:39 IST   |   Update On 2025-03-21 16:39:00 IST
  • ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது ஆகிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
  • கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, சாம் கர்ரன் வேகப்பந்து வீச்சில் முன்னணியில் இருக்க வாய்ப்புள்ளது.

பேட்ஸ்மேன்கள்

ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷெய்க் ரஷீத், வான்ஸ் பெடி, அந்த்ரே சித்தார்த்

ஆல்-ரவுண்டர்கள்

ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், விஜய் சங்கர், சாம் கர்ரன், அன்ஷுல் காம்போஜ், தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், கம்லேஷ் நகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ரவீந்திரா ஜடேஜா, ஷிவம் துபே

பந்து வீச்சாளர்கள்

கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜாப்நீட் சிங், நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், மதீஷா பதிரனா.

தொடக்க பேட்ஸ்மேன்கள்

ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. ரச்சின் ரவீந்திரா சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்றார். கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இந்த ஜோடியை சிஎஸ்கே மாற்றாது. ஒருவேளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் டேவன் கான்வே களம் இறக்கப்படலாம்.

மிடில் ஆர்டர் வரிசை

ஷிவம் துபே, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கக்கூடிய வீரராக உள்ளனர். ஷெய்க் ரஷீத், வான்ஷ் பெடி, அந்த்ரே சித்தார்த் ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் அனுபவம் கிடையாது. இதனால் அணி நிர்வாகம் சில போட்டிகளில் களம் இறக்கி பரிசோதித்து பார்க்குமா? என்பது சந்தேகம்தான்.

ஆல்-ரவுண்டர்களான விஜய் சங்கர், ஜடேஜா, அஸ்வின், சாம் கர்ரன் மிடில் ஆர்டர் வரிசையில் கைக்கொடுக்க உள்ளனர். எம்.எஸ். டோனி கடைசி நேரத்தில் களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்.

வேகப்பந்து வீச்சு

கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, சாம் கர்ரன் ஆகியோர் முதன்மை வகிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பதிரனாவுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் நாதன் எல்லீஸ் அல்லது ஓவர்டன் சேர்க்கப்படலாம். அதேபோல் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி சிறப்பாக விளையாடவில்லை என்றால் குர்ஜாப்நீட் சீங், அன்ஷுல் கம்போஜ், ராமகிருஷ்ணா கோஷ், கம்லேஷ் நகர்கோட்டி விளையாட வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் ஷிவம் துபேயை மிதவேக பந்து வீச்சாளராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்கள்

ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது ஆகியோர் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்களுடன் ஷ்ரேயாஸ் கோபால், தீபக் ஹூடா, ரச்சின் ரவிந்திரா ஆகியோர் உள்ளார். தீபக் ஹூடா, ரச்சின் ரவிந்திரா இருவரை பேட்டிங் உடன் பந்து வீச்சுக்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

வெளிநாட்டு வீரர்கள்

டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கர்ரன், ஜேமி ஓவர்ட்டன், நூர் அகமது, நாதன் எல்லிஸ், பதிரனா ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இவர்களில் ரவீந்திரா, பதிரானா, நூர் அகமது, சாம் கர்ரன் ஆடும் லெவனில் விளையாட வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News