ஐபிஎல் 2025: ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- ஓர் பார்வை
- ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் என இந்தியாவின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
- ஆனால் மோஹ்சின் கான், மயங்க் யாதவ் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
கே.எல். ராகுல் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி அணி கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்-ஐ அதிக விலைக்கு ஏலம் எடுத்து கேப்டனாக நியமித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
பேட்ஸ்மேன்கள்
ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், ஏய்டன் மார்கிராம், ஆர்யன் ஜுயல், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன்
ஆல்ரவுண்டர்
மிட்செல் மார்ஷ், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் படோனி
பந்து வீச்சாளர்கள்
ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், எம். சித்தார்த், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், மோஹ்சின் கான், ரவி பிஷ்னோய்
தொடக்க பேட்ஸ்மேன்கள்
மார்கிராம், பிரீட்ஸ்கே, மிட்செல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். இதில் பிரீட்ஸ்கே, மிட்செல் மார்ஷ் ஆகியோர் சில போட்டிகளில் களம் இறங்கலாம். ஒருவேளை இந்த ஜோடி ஏற்படவில்லை என்றால் மாற்றப்படலாம். மிட்செல் மார்ஷ் காயத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். இதனால் பேட்டிங் மட்டுமே செய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டர் வரிசை
ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமாத், மார்கிராம், ஆயுஷ் படோனி என வலுவான மிடில் ஆர்டர் வரிசையை கொண்டுள்ளது. தொடக்கம் சிறப்பாக அமைந்தால் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரன் வாணவேடிக்கையை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
வேகப்பந்து வீச்சு
ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் என இந்தியாவின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நான்கு பேரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
இந்த நான்கு பேரையும் தவிர்த்து ஷமர் ஜோசப், அர்ஷின் குல்கர்னி (ஆல்-ரவுண்டர்), பிரின்ஸ் யாதவ், ஆகாஷ் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (ஆல்-ரவுண்டர்) ஆகியோர் உள்ளனர். தற்போது மோஹ்சின் கானுக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்தெந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் லக்னோ அணி செல்லும் என்பது ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் பின்னர்தான் தெரியவரும்.
சுழற்பந்து வீச்சாளர்
ரவி பிஷ்னோய், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, ஆயுஷ் படோனி, எம். சித்தார்த், திக்வேஷ் சிங் உள்ளனர். இதனால் ரவி பிஷ்னோய், ஷபாஸ் அகமது, எம். சித்தார்த் முன்னிலை வகிப்பார்கள். தேவை என்றால் மார்கிராமை பயன்படுத்தி கொள்ள வாய்ப்புள்ளது. ஒருவேளை இவர்கள் கைக்கொடுக்கப்படவில்லை என்றால், அடுத்தக்கட்ட முயற்சிக்கு செல்லலாம்.
வெளிநாட்டு வீரர்கள்
டேவிட் மில்லர், மார்கிராம், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஷமர் ஜோசப் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.
இவர்களில் டேவிட் மில்லர், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்தும் தேவைப்பட்டால் மார்ஷ் நீக்கப்பட்டு டேவிட் மில்லர், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன் களம் இறங்கலாம். பிரீட்ஸ்கேவுக்குப் பதிலாக இம்பேக் பிளேயராக ஷமர் ஜோசப் சேர்க்கப்படலாம்.
அவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மிகப் பலமானதாக உள்ளது.