ஐ.பி.எல்.
null

இந்திய டெஸ்ட் அணியின் வெற்றிக்கு என்னால் பங்களிக்க முடியும்- வெங்கடேஷ்

Published On 2025-03-21 12:29 IST   |   Update On 2025-03-21 13:57:00 IST
  • இந்தியாவுக்காக 2 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி வெங்கடேஷ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
  • ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்த்துவதற்கு தேவையான திறன் என்னிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை கொல்கத்தாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானேவும் துணை கேப்டனாக வெங்கடேஷ் அய்யரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளில் என்னால் பங்காற்ற முடியும் என வெங்கடேஷ் அய்யர் தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 2 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி வெங்கடேஷ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதன் காரணமாக வெங்கடேஷ் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்த்துவதற்கு தேவையான திறன் என்னிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை அதை செய்ய முடியாமல் போனால் எனது கேரியர் முடியும் போது அதற்காக வருத்தப்படுவேன். தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளில் என்னால் பங்காற்ற முடியும் என்பதும் எனக்கு தெரியும்.

என்னால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியும். அதை என்னால் செய்ய முடியுமேயானால் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய அனைத்தையும் நான் கொடுக்க விரும்புகிறேன்.

என்று வெங்கடேஷ் கூறினார்.

இருப்பினும் ரஞ்சிக் கோப்பையில் வெங்கடேஷ் ஐயர் பெரியளவில் அசத்தியதாக தெரியவில்லை. இதற்கிடையே நித்திஷ் ரெட்டி சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சமீபத்தில் அசத்தினார். எனவே வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.

Tags:    

Similar News