ஆர்.சி.பி.-க்கு இந்த முறை கடைசி இடம்தான்: கில்கிறிஸ்ட்
- இங்கிலாந்து வீரர்கள் அதிகம் உள்ளதால் கடைசி இடத்தை பிடிக்கும்.
- என்னுடைய கணிப்பு விராட் கோலிக்கு எதிரானது அல்ல. ஆர்சிபி ரசிகர்களுக்கு எதிரானது அல்ல.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் ஆர்.சி.பி. இந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துள்ளார்
இது தொடர்பாக ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-
ஆர்சிபி அணி இந்த முறை கடைசி இடத்தை பிடிக்க வாய்புள்ளதாக நினைக்கிறேன். இதை உண்மை அடிப்படையில் கூறுகிறேன். ஏனென்றால் ஆர்சிபி அணியில் அதிக அளவிலான இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.
என்னுடைய கணிப்பு விராட் கோலிக்கு எதிரானது அல்ல. ஆர்சிபி ரசிகர்களுக்கு எதிரானது அல்ல. ஆர்சிபி ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இது நீங்கள் இதுகுறித்து ஏலம் எடுத்தவர்களின் கேட்கவேண்டும்.
இவ்வாறு கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக ரஜத் படிதார் உள்ளார். விராட் கோலி நட்சத்திர வீரராக உள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட் ஆகியோர் அணியில் உள்ளனர்.
ஆர்சிபி அணி விவரம்:-
பேட்ஸ்மேன்கள்
ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா.
ஆல்-ரவுண்டர்கள்
லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல்.
பந்து வீச்சாளர்கள்
ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.
கடந்த சீசனில் ஆர்சிபி 4-வது இடத்தை பிடித்தது, பிளேஆஃப் சுற்று எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.