12 ஆண்டுகளுக்கு பின் டோனியை சந்தித்த ஜொகிந்தர் சர்மா - நெகிழ்ச்சி பதிவு வைரல்
- இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
- இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜொகிந்தர் சர்மா, எம்எஸ் டோனியை சந்தித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு டோனியை சந்தித்த தருணங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இது தொடர்பான பதிவில் அவர், "நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்தித்தது அருமையாக இருந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் உங்களை சந்தித்த மகிழ்ச்சி இன்று வித்தியாசமாக இருந்தது," என குறிப்பிட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக கடைசி ஓவரை வீசிய ஜொகிந்தர் சர்மா, அதில் 12 ரன்களை தடுத்து நிறுத்தி இந்திய அணி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விளங்கினார்.
பாாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியின் கடைசி ஓவரில் முதல் பந்தை மிஸ்பா உல் ஹக் சிக்சருக்கு பறக்க விட்ட போதிலும், ஓவரின் மற்ற பந்துகளை சிறப்பாக வீசிய ஜொகிந்தர் சர்மா ரன்களை கட்டுப்படுத்தி அசத்தினார்.
தற்போது ஜொகிந்தர் சர்மா மற்றும் எம்எஸ் டோனி சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.