கிரிக்கெட் (Cricket)
'கேன் மாமா' என இந்தியாவில் என்னை அழைப்பது மிகவும் பிடிக்கும் - கேன் வில்லியம்சன் ஓபன் டாக்
- கேன் வில்லியம்சன் கடந்த சில ஆண்டுகளில் அவர் ஐதராபாத், குஜராத் அணிக்காக ஆடியுள்ளார்.
- எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் வரும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார்.
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் அவர் ஐதராபாத், குஜராத் அணிக்காக ஆடியுள்ளார். ஆனால் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் வரும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார்.
தற்போது கேன் வில்லியம்சன், பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், உங்களுக்கு மிகவும் பிடித்த NICK NAME என்ன என்று தென்னாப்பிரிக்க வீரர் ஹெண்ட்ரிச் க்ளாஸன், கேன் வில்லியம்சனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், "இந்தியாவில் அனைவரும் என்னை 'கேன் மாமா' என அழைப்பார்கள். எனக்கு அது மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.