கிரிக்கெட் (Cricket)
null
முகமது சமி மீண்டும் வரார்.. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணி அறிவிப்பு
- முகமது சமி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
- துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மீண்டும் முகமது சமி இடம் பிடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சாம்சன், அபிஷேக் சர்மா, திலக், நிதிஷ் ரெட்டி, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, ஜூரல், ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.