என்னால் அதிரடியாகவும் விளையாட முடியும்: பிக் பாஷ் லீக்கில் 64 பந்தில் 121 ரன் விளாசிய ஸ்டீவ் சுமித்
- 58 பந்தில் 4 சிக்ஸ், 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.
- கடைசி ஓவரில் மூன்று சிக்சர்கள் விளாசினார்.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ்- பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜோஷ் பிளிப், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோஷ் பிளிப் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடினார். பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார். இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்ததுடன் ஸ்மித்தும் சதத்தை நெருங்கினார்.
19-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 58 பந்தில் சதம் அடித்தார். பிக் பாஷ் லீக்கில் இது அவரிடன் 3-வது சதம் இதுவாகும். அத்துடன் கடைசி ஓவரில் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. ஸ்மித் 64 பந்தில் 10 பவுண்டரிகள், 7 சிக்சருடன் 121 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.