கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

Published On 2025-02-28 21:19 IST   |   Update On 2025-02-28 21:19:00 IST
  • மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது.
  • டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பெங்களூரு:

5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் ஆகியோர் களமிறங்கினர். யாஸ்திகா பாட்டியா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மேத்யூஸ் 22 ரன்னில் வெளியேறினார்.

இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி நாட் ஸ்கைவர்-பிரண்ட் 18, ஹர்மன்ப்ரீத் கவுர் 22, அமெலியா கெர் 17, சஜீவன் சஜனா 5, கமலினி 1, சமஸ்கிருத குப்தா 3 என வெளியேறினார்.

இறுதியில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Tags:    

Similar News