இரண்டாவது டி20 போட்டி: கனடாவுக்கு எதிராக நமீபியா திரில் வெற்றி
- முதலில் ஆடிய கனடா 15 ஓவரில் 145 ரன்கள் எடுத்தது.
- நமீபியா சார்பில் ட்ரெம்பிள்மென் 4 விக்கெட்டும், ஸ்மிட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கனடா அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மழை காரணமாக
முதல் டி20 போட்டி டாஸ் கூட சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. மழை பெய்ததால் ஆட்டம் 15 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நமீபியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கனடா 15 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. யுவராஜ் சாம்ரா 37 ரன்னும், கன்வர்பால் 30 ரன்னும் எடுத்தனர்.
நமீபியா சார்பில் ட்ரெம்பிள்மென் 4 விக்கெட்டும், ஸ்மிட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஜான் நிகோல் 36 ரன்னும், ஸ்மிட் 33 ரன்னும், நிகோலஸ் டெவின் 32 ரன்னும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், நமீபியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.