null
விராட் கோலி கட்டியணைத்தால் ஓய்வா? இன்ஸ்டா ஸ்டோரி மூலம் ஜடேஜா விளக்கம்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார்.
- ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார்.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனை இந்திய வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த தொடருடன் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஓய்வு பெறுவதாக தகவல் வெளியானது. ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார். அதனையடுத்து அந்த போட்டியுடன் அஸ்வின் ஓய்வு அறிவித்து விடுவார். அதுபோல ஜடேஜாவையும் கட்டியணையத்தால் ஒருநாள் போட்டியில் இருந்து ஜடேஜா ஓய்வு பெறப்போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நன்றி என தெரிவித்துள்ளார்.