கிரிக்கெட் (Cricket)

டெஸ்டில் 100 விக்கெட்: சமிந்தா வாஸ், மலிங்காவுடன் இணைந்தார் லஹிரு குமாரா

Published On 2024-12-05 11:31 GMT   |   Update On 2024-12-05 11:31 GMT
  • சமிந்தா வாஸ் 355 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
  • லசித் மலிங்கா 101 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 44 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் மார்க்கிராம் (20), 4-வது வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (4) ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா வீழ்த்தினார்.

இந்த இரண்டு விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 101 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய 5-வது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக சமிந்தா வாஸ் (355), சுரங்கா லக்மல் (171), லசித் மலிங்கா (101), தில்கரா பெர்னாண்டோ (100) ஆகிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் 100 விக்கெட் அல்லது அதற்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.

Tags:    

Similar News