ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான கள நடுவர்கள் அறிவிப்பு
- துபாயில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியாவும், 2-வது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவை நியூசிலாந்தும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
வருகிற ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரைபல் (வயது 58), இங்கிலாந்தை சேர்ந்த இல்லிங்வொர்த் (வயது 61) ஆகிய கள நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரைபல் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நடுவராக பணியாற்றினார். இல்லிங்வொர்த் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது நடுவராக பணியாற்றினார்.
இல்லிங்வொர்த் நான்கு முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை வென்றுள்ளார். இவர் இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
3-வது நடுவராக ஜோல் வில்சன், 4-வது நடுவராக குமார் தர்மசேனா, போட்டி நடுவராக ரஞ்சன் மதுகலே நியமிக்கப்பட்டுள்ளனர்.