கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 கேட்ச்கள் பிடித்து ஸ்டீவ் ஸ்மித் சாதனை

Published On 2025-02-09 17:59 IST   |   Update On 2025-02-09 17:59:00 IST
  • டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது
  • 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 2-வது போட்டி காலேயில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆலஅவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து 75 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது .

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் 3 ஆவது இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் 3 கேட்சுகளை பிடித்தார். இதன்மூலம் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்சுகளை பிடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்துக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 196 கேட்ச்களும் மார்க் வாக் - 181 கேட்ச்களும் பிடித்து அடுத்தடுத்த இடத்தில உள்ளனர்.

குறிப்பாக மிக குறைவான டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்தவர்கள்:

1. ராகுல் டிராவிட் (இந்தியா)- 210 (164 டெஸ்ட்)

2. ஜோ ரூட் (இங்கிலாந்து)- 207 (152 டெஸ்ட்)

3. ஜெயவர்த்தனே (இலங்கை)-205 (149 டெஸ்ட்)

4. ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)- 200 (166 டெஸ்ட்)

5. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)- 200 (116 டெஸ்ட்)

Tags:    

Similar News