அதிவேகமாக 16,000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீரர்: சாதனை படைத்த விராட் கோலி
- டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
- இந்தியா 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அகமதாபாத்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களை அடித்து 73-வது ஒருநாள் அரை சதத்தைப் பதிவுசெய்தார்.
ஆசியாவில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 16,000 ரன்களை எட்டிய வீரராக மாறினார் விராட் கோலி. இதன்மூலம் குறைவான இன்னிங்சில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை எட்டிய வீரராக விராட் கோலி (340 இன்னிங்ஸ்) சாதனையை படைத்தார்.