பிரான்ஸ் அணிக்காக அதிக கோல் அடித்து ஆலிவர் ஜிரவுட் சாதனை
- இந்த ஆட்டத்தில் 44-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்காக ஆலிவர் ஜிரவுட் முதல் கோலை அடித்தார்.
- அவர் 116 போட்டியில் விளையாடி 52 கோல்கள் அடித்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 44-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்காக ஆலிவர் ஜிரவுட் முதல் கோலை அடித்தார். இதன்மூலம் அவர் புதிய சாதனை படைத்தார். பிரான்ஸ் நாட்டுக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை ஜிரவுட் பெற்றார்.
அவர் 116 போட்டியில் விளையாடி 52 கோல்கள் அடித்துள்ளார். சராசரி 0.45 ஆகும். முன்கள வீரரான ஜிரவுட் 2011 முதல் பிரான்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஹென்றி 51 கோல்கள் (123 ஆட்டம்) அடித்து முதல் இடத்தில் இருந்தார். இந்த உலக கோப்பை போட்டி மூலம் ஜிரவுட் அவரை முந்தி சாதனை புரிந்தார்.
தற்போது ஜிரவுட் 59 கோல்களுடன் முதல் இடத்திலும், ஹென்றி 51 கோலுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
கிரிஸ்மேன் (42 கோல்) பிளாட்டினி (41), பென்சிமா (37) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். 36 வயதான ஜிரவுட் இந்த உலக கோப்பையில் 3 கோல்கள் அடித்துள்ளார்.