விளையாட்டு

டாடா ஸ்டீல் செஸ்: பிரக்ஞானந்தா, குகேஷ் முன்னிலை

Published On 2025-02-02 10:59 IST   |   Update On 2025-02-02 10:59:00 IST
  • இந்த தொடரின் 12-வது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
  • குகேஷின் 7-வது டிராவாக இது அமைந்தது.

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்திரில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 12-வது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் உலக சாம்பியன் சென்னை கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்ளளூரை சேர்ந்த ஜோர்டான் வான் பாரஸ்டை எதிர்கொண்டார். நீண்ட நேரம் நீடித்த நிலையில், இந்த ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தது. இந்த தொடரில் குகேஷின் 7-வது டிராவாக இது அமைந்தது.

மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா செர்பியாவை சேர்ந்த அலெக்சியை 29-வது காய் நகர்தலுக்கு பிறகு தோற்கடித்தார். இது அவரது 5-வது வெற்றியாக அமைந்தது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பிரக்ஞானந்தா முன்னேற்றம் அடைந்துள்ளார்.

12 சுற்றுகளின் முடிவில், பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகிய இருவரும் தலா 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். இன்று நடைபெறும் 13-வது மற்றும் இறுதி சுற்று போட்டி சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும்.

சேலஞ்சர்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த வைஷாலி, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் தோற்றனர். வைஷாலி 5 புள்ளியுடன் 11-வது இடத்திலும், திவ்யா தேஷ்முக் 3 புள்ளியுடன் 13-வது இடத்திலும் உள்ளனர்.

Tags:    

Similar News