டென்னிஸ்
கத்தார் ஓபன் டென்னிஸ்- கோகோ காப்புக்கு அதிர்ச்சி அளித்த உக்ரைன் வீராங்கனை
- கோகோ காப்- மார்டா ஒலேஹிவ்னா கோஸ்ட்யுக் ஆகியோர் மோதினர்.
- முதல் செட்டை மார்டா எளிதாக வென்றார்.
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் உக்ரைன் வீராங்கனையான மார்டா கோஸ்ட்யுக் ஆகியோர் மோதினர்.
இதில் முதல் செட்டை மார்டா எளிதாக வென்றார். இதனையடுத்து 2-வது செட் பரபரப்பாக சென்றது. இதிலும் மார்டோ 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் 2-6, 5-7 என்ற கணக்கில் கோகோ காப் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார்.