செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வு: 1 லட்சம் பேர் எழுதினர்

Published On 2016-06-06 08:41 IST   |   Update On 2016-06-06 08:41:00 IST
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வை 1 லட்சத்து 8 ஆயிரத்து 554 பேர் தேர்வு எழுதினர்.
புதுச்சேரி:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு புதுவையில் 150 இடங்களும், காரைக்காலில் 50 இடங்களும் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இதில் புதுவையில் உள்ள கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கு 40 இடங்களும், காரைக்கால் கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கு 14 இடங்களும் என மொத்தம் 54 இடங்கள் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்கள் அகில இந்திய அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

இதற்கான நுழைவுத்தேர்வு நேற்று இந்தியா முழுவதும் 75 நகரங்களில் 270 மையங்களிலும், புதுவையில் 9 மையங்களிலும் நடந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 193 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக தேர்வு நடந்தது. இதில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 554 பேர் தேர்வு எழுதினர்.

இந்த நுழைவுத்தேர்வு முடிவுகள் வருகிற 13-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூன் 20-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி தொடங்குகிறது.

Similar News