செய்திகள்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி கேண்டீனில் 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி கேண்டீனில் 100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் பிற ஊழியர்கள் சாப்பிட 2 கேண்டீன்கள் உள்ளன. இந்த கேண்டீனை தனியார் ஒருவர் நடத்தி வருகிறார்.
இங்குள்ள ஒரு கேண்டீனில் ரேஷன் அரிசி இருப்பதாகவும் வீட்டிற்கு உபயோகப்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாகவும் விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி அவரது அறிவுரையின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கேண்டீனில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த வீட்டில் உபயோகப்படுத்தும் 6 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் 100 கிலோ ரேஷன் அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.