செய்திகள்
பெண்ணிடம் ரூ.10 லட்சம்-33 பவுன் மோசடி செய்த டாக்டர் மீது வழக்கு: புதுக்கோட்டை போலீசார் நடவடிக்கை
பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.10 லட்சம் பணம் மற்றும் 33 பவுன் நகை மோசடி செய்த அரசு டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மதியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வரும் மணிகண்டன் (வயது 42) என்பவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தனது மருத்துவ படிப்பு செலவுக்காக ரூ.10 லட்சம் மற்றும் 33 பவுன் நகைகளை என்னிடம் வாங்கினார்.
இந்தநிலையில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு, என்னை திருமணம் செய்ய மறுத்து வருகிறார். மேலும் என்னிடம் வாங்கிய பணம் மற்றும் நகைகளை தரவும் மறுக்கிறார்.
இது குறித்து அரசு டாக்டர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணம் மற்றும் நகையை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபற்றி புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் டாக்டர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.