செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குள் செல்ல புதிய அடையாள சீட்டு

Published On 2016-07-26 11:52 IST   |   Update On 2016-07-26 11:52:00 IST
பாதுகாப்பு காரணங்களுக்காக கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குள் செல்ல புதிய அடையாள சீட்டு பெற வேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தில் இயங்கும் அணுசக்தி நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் ஓப்பந்த தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் கடிதம் மற்றும் பகுதி காவல் நிலைய சான்று இரண்டையும் கான்பித்து வாரம், மாதம் தோறும் அணுமின் நிலையத்துக்குள் செல்ல அணுமதி பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நிலைய இயக்குநர் பெயரையும், காவல் துறை உயர் அதிகாரி பெயரையும் பயன்படுத்தி நுழைவு சீட்டு பெற்றுத் தறுவதாக சிலர் செயல்படுவதாகவும் தொழிலாளிகள் போர்வையில் சமூக விரோதிகள் அணுமின் நிலையத்துக்குள் செல்வதாகவும் புகார்கள் எழுந்தது.

கடந்த ஆண்டு அணு உலை பணிகளை ரகசியமாக படம் பிடித்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கேமரா, பென்டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அணுசக்தி வளாகப் பகுதியின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இனி அணுமின் நிலையம் உள்ளே செல்வோர் காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் விண்ணப்பம் பகுதி காவல் நிலையத்துக்கு அனுப்பபட்டு குற்றப் பின்னனிகள் இல்லை என நன்னடத்தை சான்று வந்த பிறகே அணுசக்தி வளாகத்துக்குள் நுழைய அணுமதிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்து விட்டதாக காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி தெரிவித்தார்.

Similar News