செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

Published On 2016-07-26 12:16 IST   |   Update On 2016-07-26 12:16:00 IST
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லக்கோட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை விழா வரும் 28ம் தேதி நடைபெற்வுள்ளது. இதை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 30.7.2016 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News