செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 935 கன அடியாக குறைந்தது

Published On 2016-09-06 10:07 IST   |   Update On 2016-09-06 10:08:00 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 935 கன அடியாக குறைந்தது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

கடந்த 1-ந்தேதி 7 ஆயிரத்து 153 கன அடியாக இருந்த நீர்வரத்து 2-ந்தேதி 10 ஆயிரத்து 694 கனஅடியாக அதிகரித்தது. 3-ந்தேதி நீர்வரத்து 8 ஆயிரத்து 33 கனஅடியாக இருந்தது. 4-ந்தேதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து 6 ஆயிரத்து 65 கன அடியாக சரிந்தது.

நேற்று காலை நீர்வரத்து 4 ஆயிரத்து 676 கனஅடியாக குறைந்தது. இன்று காலை 8 மணிக்கு நீர் வரத்து மேலும் குறைந்தது. அதாவது வினாடிக்கு 3 ஆயிரத்து 935 கன அடி தண்ணீரே வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 28-ந்தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 71.68 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 75.83 அடியாக உள்ளது. 8 நாட்களில் 4 அடி உயர்ந்து உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு அரை அடி வீதம் நீர்மட்டம் உயர்ந்தது.

Similar News