செய்திகள்
ராஜபாளையம் அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை
விவசாயி வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள தளவாய்புரம் அருகே உள்ள ஆசில்லாபுரத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது65), விவசாயி. இவரது மனைவி வேலுத்தாய் (62).
இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு திருமணஞ்சேரியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமிகள், பாலுச்சாமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 17 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிக்கொண்டு தப்பினர். இவற்றின் மதிப்பு ரூ.1¾ லட்சம் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.