செய்திகள்

வாழ்வில் சிறக்க இளைஞர்கள் காந்திய சிந்தனையை பின்பற்ற வேண்டும் - பேராசிரியை பேச்சு

Published On 2016-10-03 12:45 IST   |   Update On 2016-10-03 12:45:00 IST
வாழ்வில் சிறக்க இளைஞர்கள் காந்திய சிந்தனையை பின்பற்ற வேண்டும் என பேராசிரியை இளம்பிறை மணிமாறன் தெரிவித்தார்.
மதுரை:

மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியையும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இளம்பிறை மணிமாறன் கலந்து கொண்டார்.

காந்திய சிந்தனை என்பது அகிம்சை, அன்பு, நேர்மை ஆகியவை ஒன்றினைந்ததாகும். ஆனால் இளைஞர்கள் தற்போது அறம் சார்ந்த சிந்தனைகளில் கவனம் செலுத்தாமல், தவறான வழிகளில் செல்கின்றனர்.

இளைஞர்களிடம், தேசத் தலைவர்களின் வரலாற்றையும், சுதந்திரத்துக்காக அவர்கள் செய்த தியாகத்தையும் எடுத்துரைப்பது அவசியம். வாழ்வில் சிறக்க இளைஞர்கள் காந்திய சிந்தனையை பின்பற்ற வேண்டும். மற்றவர்களது தவறை திருத்தும் முன், நம் குறைகளை களைதல் அவசியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News