செய்திகள்
வாழப்பாடி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் விஷம் குடித்து தற்கொலை
வாழப்பாடி அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் மிலிட்டரி காலனியை சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவரது மனைவி அமராவதி (வயது55). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் சிங்கிபுரம் மிலிட்டரி காலனியில் உள்ளது. இதில் அரளி பூ பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிலும், போர் வேலிலும் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. இதனால், அரளி பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. நீர் பாசனம் செய்ய வழி இல்லாமல் போனதால் சாகுபடி செய்திருந்த அரளி பூச்செடிகள் வாட தொடங்கின
இதனால், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மீண்டும் விவசாய நிலத்தில் போர் போட்டனர். அதிலும் தண்ணீர் வரவில்லை.
இந்த நிலையில் மகளிர் குழுவினர் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு கூறினர். இதனால், மனம் உடைந்த அமராவதி தொடர்ந்து 2, 3 நாட்கள் உணவு எடுத்துக் கொள்ளமால் இருந்ததாக கூறப்படுகிறது. சோர்ந்த நிலையில் இருந்த அவர், நேற்று குருணை மருந்தை எடுத்து கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அமராவதி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.