செய்திகள்
பழனியில் அரசு ஆஸ்பத்திரியில் 1 வயது குழந்தை கடத்தல்
பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த 1 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி:
பழனி அருகில் உள்ள அ.கலையம்புத்தூரை சேர்ந்தவர் ஒண்டிமுத்து. தேங்காய் உறிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவிகா (வயது30). இவர்களுக்கு பிரகாஷ் (3), பிரேம்குமார் (1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பிரேம்குமாருக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது.
இதனால் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு தேவிகா தனது 2 மகன்களுக்கும் உணவு வாங்கி கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். குழந்தைகளுக்கு துணையாக தேவிகாவின் தாய் அழகு இருந்தார்.
இரவில் 2 குழந்தைகளையும் ஆஸ்பத்திரி பெட்டில் படுக்க வைத்து விட்டு அழகு கீழே படுத்திருந்தார். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது 1 வயது குழந்தை பிரேம்குமாரை காணவில்லை. ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகளுக்கு தகவல் தெரிவித்தார்.
பழனி அரசு ஆஸ்பத்திரி பெண்கள் வார்டில் மதினா நகரை சேர்ந்த சம்சுதீன் மனைவி ஆஜிதாபேகம் (42) என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரையும் காணவில்லை. எனவே அவர் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்தியது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.