செய்திகள்

வேலூர் அருகே இளம்பெண் கழுத்தறுத்து கொலை

Published On 2017-09-14 17:58 IST   |   Update On 2017-09-14 17:58:00 IST
வேலூர் அருகே இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து நிலத்தில் வீசியுள்ளனர்.

வேலூர்:

அணைக்கட்டு அருகே உள்ள அண்ணாச்சி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மனைவி பாரதி (வயது 30). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஜெய்சங்கர் இறந்து விட்டார்.

இதனால் 2 குழந்தைகளுடன் பாரதி கணியம்பாடி கன்னிகோவில் தெருவில் வசித்து வந்தார். செங்கல் சூளைக்கு கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கணியம்பாடியில் உள்ள ஒரு இரும்பு கம்பெனி பின்புறம் உள்ள நிலத்தில் இன்று காலை பாரதி கழுத்து அறுக்கபட்டு கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.

இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாரதியை திட்டமிட்டு கழுத்தறுத்து கொன்றுள்ளனர். பாரதியை வரவழைத்து கொன்றார்களா அல்லது கடத்தி கொல்லபட்டாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. பாரதிக்கு முன் விரோதிகள் யாரும் உள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News