செய்திகள்

கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர் ஆனால் அரசியலில் சாதிக்க முடியாது - அர்ஜூன் சம்பத்

Published On 2019-04-04 13:31 IST   |   Update On 2019-04-04 13:31:00 IST
கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர் ஆனால் அரசியலில் சாதிக்க முடியாது என்று ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #LokSabhaElections2019 #KamalHassan
ஈரோடு:

ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. பணம் கொடுத்து வெற்றி பெற அரசியல் கட்சியினர் துடிக்கிறார்கள். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு சாட்சி துரைமுருகன் வீடு-குடோன்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

காங்கிரஸ் கட்சியினர் ‘‘நீட்’’ தேர்வுக்கு விலக்கு அளிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் சட்டப்படி அது நடக்காது. விலக்கு அளிக்கவும் முடியாது பொய்யான வாக்குறுதி ஆகும். எப்படியோ ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது.

கமல்ஹாசனுக்கு மக்கள் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் கிடையாது. அது ஏற்படவும் செய்யாது. கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர் அவ்வளவுதான். அவரால் அரசியலில் சாதிக்க முடியாது. அவர் சில வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறார். ஆனால் கமலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடையாது.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

Similar News