செய்திகள்

ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-04-04 15:01 IST   |   Update On 2019-04-04 15:01:00 IST
திமுக தலைவர் முக ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்க போவது கிடையாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #MKStalin
கோபி:

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சித் தலைவி அம்மா ஏழை-எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இன்று அந்த வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது.

மக்களுக்காக பாடுபடும் அ.தி.மு.க. அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தி.மு.க. ஆட்சியில் மின்தடை ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இன்றும் அதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

ஆனால் இன்று எங்கும் மின்தடையே கிடையாது. மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் மீது தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாத மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். கனவு காண்கிறார். அவரது முதல்வர் கனவு பலிக்க போவது கிடையாது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPanneerselvam #MKStalin

Similar News