செய்திகள்
கொடைக்கானலுக்கு குடிநீர் வழங்கும் அப்சர்வேட்டரி அணை நிரம்பியது
கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து 20 நாட்களாக மழை பெய்ததால் குடிநீர் வழங்கும் அப்சர்வேட்டரி அணை நிரம்பி மறுகால் வழிந்தோடியது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர்த்தேக்கம் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ளது.
இந்த பழமையான அணையின் மொத்த பரப்பளவு சுமார் 500 ஏக்கர். இதில் 50 ஏக்கர் பரப்பளவில் 22 அடி உயரத்தில் குடிநீர்த் தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக கொடைக்கானலில் தண்ணீர் பிரச்சனை நிலவி வந்த நிலையில் கடந்த மாதம் மழை பெய்யத் தொடங்கியது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. தொடர்ந்து 20 நாட்களாக மழை பெய்தது. இதனால் நகராட்சி குடிநீர்த்தேக்கம் நிறைந்து மறுகால் வழிந்தோடியது.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் குடிநீர்த்தேக்கம் பகுதிக்குச் சென்று பார்வையிட்டு நீரில் மலர்தூவி பொது மக்களின் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து வைத்தார். நீர்த்தேக்கம் நிரம்பியதைத் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேலாளர் குமார்சிங் மற்றும் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், கடந்த ஓராண்டிற்கு பிறகு குடிநீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் வழிந்தோடுகிறது.
இந்த அணையில் உள்ள தண்ணீரும் வரும் காலங்களில் பெய்யும் மழையின் தண்ணீரையும் கொண்டு ஓராண்டிற்கு கொடைக்கானலில் சீராக குடிநீர் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும். தட்டுப்பாடு இருக்காது என்றார்.
இதனிடையே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானல் மலையில் உள்ள பாம்பாறு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கொடைக்கானல் மனோரஞ்சிதம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. 36 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் 33 அடியை எட்டியுள்ளது. ஓரிரு நாளில் இந்த அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.