செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவுக்கு இன்று 18 பேர் உயிரிழப்பு

Published On 2020-08-13 16:37 IST   |   Update On 2020-08-13 16:37:00 IST
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 059 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 2,370 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், கீழ்ப்பாக்கம்,  ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் தலா 2 பேரும், தனியார் மருத்துவமனைகளில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Similar News