தமிழ்நாடு
வாலிபர் கைது

சேலம் மாணவியின் நிர்வாண படத்தை காட்டி மிரட்டி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பறித்த வாலிபர் கைது

Published On 2022-04-07 14:13 IST   |   Update On 2022-04-07 14:13:00 IST
சேலத்தில் மாணவியின் நிர்வாண படத்தை காட்டி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பறித்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த உறவினரான சசிகுமாருடன் (23), மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சசிகுமார் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது . மேலும் மாணவியை நிர்வாணமாக செல்போனில் படம் எடுத்து அனுப்புமாறு மிரட்டினார்.

இதனால் பயந்து போன மாணவி தன்னை நிர்வாணமாக செல்போனில் படம் எடுத்து அனுப்பினார். இதையடுத்து அந்த படத்தை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய சசிகுமார் அந்த மாணவியிடம் பணம் கேட்டார். இதனால் மேலும் பயந்து போன மாணவி அவருடைய தாத்தா வீட்டில் இருந்து பல தவணைகளாக ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்தை கொடுத்தார்.

ஆனாலும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததால் மாணவி பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து நேற்றிரவு கள்ளக்குறிச்சிக்கு சென்ற போலீசார் சசிகுமாரை பிடித்து சேலத்திற்கு அழைத்து வந்த விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள போட்டோக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Similar News