தமிழ்நாடு
வகுப்பறை பூட்டுகளுக்கு மனித மலம் பூசியும், குடிநீர் தொட்டி சேதப்படுத்தி[யும் மர்ம நபர் அட்டகாசம்- மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்

வகுப்பறை பூட்டுகளுக்கு மனித மலம் பூசியும், குடிநீர் தொட்டி சேதப்படுத்தி[யும் மர்ம நபர் அட்டகாசம்- மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்

Published On 2023-08-19 15:48 IST   |   Update On 2023-08-19 15:49:00 IST
  • சம்பவம் மாணவர்கள் மற்றும் கிராமமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்:

திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஏற்ப பள்ளி கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குறுகலான இடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி வகுப்பறைகளுக்கு இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் மலம் பூசியும் குடிநீர் தொட்டி உடைத்த சம்பவம் மாணவர்கள் மற்றும் கிராமமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் மேலும் அடிக்கடி மர்மநபர்கள் பள்ளியில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

தமிழ்நாடு அரசு உடனடியாக பள்ளிக்கு உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி வகுப்பறைகளுக்கு மலம் தடவிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News