தமிழ்நாடு

வன்முறை எதிரொலி- அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைப்பு

Published On 2022-07-11 12:59 IST   |   Update On 2022-07-11 12:59:00 IST
  • சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை
  • தலைமை அலுவலகத்திற்குள் இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசினார்கள்.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இன்னும் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் இருந்தனர்.

மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தனர்.

அதன்பின்னர் ஆர்டிஓ சாய் வர்தினி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியே வந்தனர். வெளியே வந்த ஓபிஎஸ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 

Tags:    

Similar News