தமிழ்நாடு

ஜெயலலிதா சிலை அகற்றம்- அதிமுகவினர் சாலை மறியல்

Published On 2022-07-04 03:31 GMT   |   Update On 2022-07-04 03:31 GMT
  • எம்ஜிஆர் சிலைக்கு அருகில், ஒரு வாரத்திற்கு முன்பு, ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது.
  • சிலையை அகற்றக்கூடாது எனக் கூறி போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர்.

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தொழுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகில், ஒரு வாரத்திற்கு முன்பு, ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையை போலீசார் இரவோடு இரவாக அகற்றினர்.

அப்போது அங்கு திரண்ட அதிமுகவினர், சிலையை அகற்றக்கூடாது எனக் கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர்

மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News