ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படமாட்டேன்: கொளத்தூர் கிருஷ்ணமூர்த்திக்கு கே.பி.முனுசாமி சவால்
- கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார்.
- கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்
சென்னை:
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் கேட்டதாக கூறியதுடன், பணம் கேட்பது தொடர்பான ஆடியோவை வெளியிட்டார்.
ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன் என்றும் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள கே.பி.முனுசாமி, "கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான்" என்றார். ஆனால் தேர்தல் செலவுக்காக கடனாக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுவதாகவும், ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.