தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்- ஜனாதிபதியை சந்திக்கிறார்
- நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார்.
- நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் குடியரசு தலைவரிடமும் ஸ்டாலின் கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி செல்கிறார். அங்கு, நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தவிர நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் குடியரசு தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.