தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம்- புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2022-10-20 08:43 GMT   |   Update On 2022-10-20 08:43 GMT
  • செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில், ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு மீன் விதைப் பண்ணை மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையம்.
  • ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.1.05 கோடி செலவில் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கு கட்டப்பட்டுள்ள பதப்படுத்தும் மையம்.

சென்னை:

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில், ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு மீன் விதைப் பண்ணை மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையம்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசு மீன் பண்ணையில் ரூ.1.09 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள மீன் விதைப்பண்ணை. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி மீன்இறங்கு தளத்தில் ரூ.1.59 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள்.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.1.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பனிக்கட்டி உற்பத்தி நிலையம் மற்றும் ரூ.1.14 கோடி செலவில் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கு கட்டப்பட்டுள்ள பதப்படுத்தும் மையம்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.1.05 கோடி செலவில் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கு கட்டப்பட்டுள்ள பதப்படுத்தும் மையம்.

நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல் தளத்தில் 30,602 சதுர அடி பரப்பில் ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கல்லூரி முதல்வர் அலுவலகம், ஆசிரியர்கள் அறை, ஆய்வகங்கள், கருத்தரங்கு அறை, தேர்வு அறை உள்ளிட்ட பல்வேறு அறைகள்.

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் குடியிருப்புக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.24.92 கோடி செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய களக்கண்காணிப்பு மற்றும் விவசாயிகள் தகவல் மையக் கட்டிடம், மாவட்ட கால்நடைப்பண்ணையில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூட கருத்தரிப்பு தொழில் நுட்ப மையம் மற்றும் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொலி காளை கொட்டகைகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய களக் கண்காணிப்பு மற்றும் விவசாயிகள் தகவல் மையக் கட்டிடம், நாமக்கல் மாவட்டம், கூட்டப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் தலா ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டிடங்கள் என மொத்தம் 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்புத் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News